வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!
அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி அதிபரது முழுமையான ஒத்துழைப்புடன் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவுப் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் குறித்த விழிப்புணர்வு இன்றையதினம் (6) காலை வேலணை மத்திய கல்லூரியின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து விழிப்புணர்வு
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பிரதானான பொலிஸ் பரிசோதகர் பிரபாகரனின் பிரசன்னத்துடன் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி சமன் குமார தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வில் வீதி ஒழுங்கு தொடர்பில் மாணவர்களுக்கு செயன்முறைகளூடாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் முறையற்ற போக்குவரத்து முறைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வில் வேலணை மத்தியகல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam