தேசிய வைத்தியசாலையாக தரமுயரும் யாழ். போதனா வைத்தியசாலை: ரணில் பச்சைக்கொடி
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) வழிமொழியப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவு, நேற்றைய (27.05.2024) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்குவதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கமைய, இந்த முன்மொழிவு அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.
தரமுயர்த்தப்படவுள்ள வைத்தியசாலை
இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதியால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
