நாட்டில் இன முரண்பாடுகளை தூண்ட முயற்சி: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
நாட்டின் தேசிய பாதுகாப்பு அல்லது இன முரண்பாடுகள் தொடர்பில் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு சேவையிலிருந்தும் அரசாங்கத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் நேற்று (23.08.2023) வியாழக்கிழமை, இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன முரண்பாடு
பல்வேறு வதந்திகள் மற்றும் இதுபோன்ற விடயங்கள் குறித்து பேஸ்புக்கில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சில பிரதேசங்களில் அரசியல் ஆதரவுடன் சில குழுக்கள் இன முரண்பாடுகளை தூண்ட முயற்சிப்பதை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் அவதானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் இந்தக் குழுக்கள் மீது
கவனம் செலுத்தி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா
பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.




