கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின்(NSE) பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(18)கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாயத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முதியோர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல்
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் முதியோருக்கான கொடுப்பனவினை பெற்றுக் கொள்வதிலுள்ள இடர்பாடுகள், முதியோருக்கான கொடுப்பனவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள், வெளிமாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதியோர் தேசிய செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர்களுடன் 2023, 2024ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, முதியோர் தேசிய செயலகத்தின் தலைமைப்பீட உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்




