தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் "தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை" தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (25) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கானது வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கையானது, இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கொள்கையாகும். இந்த கொள்கையானது சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, மற்றும் சுரண்டல் போன்ற சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும், சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக மாணவத் தூதுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



