மத்திய புலனாய்வுப் பணியகத்தினால் மேலுமொரு அரசியல்வாதி கைது
களுத்துறை பிரதேச சபைக்கான வேட்பாளர் ஒருவர், ஜீப் வண்டி ஒன்றை மோசடியாகப் பதிவு செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 38 வயதுடைய ருசிரு ஸ்ரீமால் பெர்னாண்டோ என்ற வேட்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ தரவுகளைத் திரிபுபடுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இவர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பொலிஸாரின் தகவல்களின்படி, சந்தேகநபர் வாகனப் பதிவுப் பதிவேடுகளை மாற்றியமைத்து, குறித்த ஜீப் வண்டியைத் தவறாகப் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam