தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர் உமருக்கு எதிரான மீண்டும் விசாரணைக்கு வரும் மனு
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOCSL) 2026-2030 காலப்பகுதிக்கான தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜஸ்வர் உமரின் வேட்புமனுவிற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் டானிஷ் அலியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று( 24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜஸ்வர் உமருக்கு எதிராக 21ஆம் திகதி விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மேல்முறையீட்டு ஆலோசனைக்குழுவிடம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மனு விசாரணை
ஜஸ்வர் உமர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அவர் எந்த வகையிலும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, இன்று மனு விசாரணைக்காக இரு தரப்பினரும் அவர்களது வழக்கறிஞர்களும் முன்னிலையாகியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை தேசிய ஒலிம்பிக்குழுவின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜஸ்வர் உமரின் வேட்புமனுவிற்கு எதிராக கடந்த தினங்களில் தற்போதைய ஒலிம்பிக் குழு செயலாளர் ரிப்தி பஹ்மி, பொருளாளர் பிரிதிவிராஜ் பெரேரா மற்றும் முன்னாள் சர்வதேச நடுவர் சுனில் செனவீர ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆட்சேபனைகள் விசாரணை
இந்த ஆட்சேபனைகள்/முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 20 திகதி மூன்று ஆட்சேபனை மனுக்களும் தேர்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின்படி, இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் செயல்முறையில் ஜஸ்வர் உமரின் வேட்புமனு முழுமையாக செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து ஏப்ரல் 25, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam