தேசிய ரீதியிலான சாதனை படைக்க தயாராகும் யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள்
தனியார் நிறுவனம் ஒன்று தேசியரீதியில் நடாத்திய மென் திறன்கள் வினாடி வினா போட்டியில் (Soft Skills Quiz Competition – 2024) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொழினுட்ப பிரிவைச் சேர்ந்த இரு அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த போட்டியானது நேற்று (30.04.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நாடளாவியரீதியில் நடாத்திய மேற்படி போட்டியில் சுமார் 190 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியுள்ளன.
மென் திறன் விருத்தி
குறித்த போட்டியின் முதற்கட்டம் முழுவதுமாக நிகழ்நிலை முறையில் இடம்பெற்றதுடன் மத்திய கல்லூரி சார்பாக தலா நான்கு உறுப்பினர்கள் அடங்கிய நான்கு குழுக்கள் போட்டியிட்டுள்ளது.
போட்டியானது இரண்டு சுற்றுக்களை உள்ளடக்கியதோடு முதலாவது சுற்றில் விமர்சன சிந்தனை தொடர்பான வினாக்களும் இரண்டாவது சுற்றில் தர்க்க சிந்தனை தொடர்பான வினாக்களும் வினவப்பட்டது.
மேலும், மென் திறன்கள் தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டதுடன் குறித்த கருத்தரங்கானது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும், சுய ஆக்கத்திறன் மேம்பாடு மற்றும் தொடர்பாடல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.
குழு ஏ பிரிவில் ஆருரன், பிரவீன், யாrசிகன், கலைச்சாந் போன்றோரும் குழு பி பிரிவில் ஹரிஸ், சபீசன், பகிஸ்கார், சதுர்சன் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |