தேசிய மட்டத்தில் சாதனை படைத்த அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள்
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் கொடு கொட்டி நடனம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஏனைய எட்டு மாகாணங்களுடன் மோதி இந்த சாதனையை அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
தொடர் பயிற்சிகள்
தொடர்ந்தும் இரண்டாவது முறையாக இந்த சாதனையை குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பாடசாலையின் நடன பாட ஆசிரியரான கஜிதா தனுரனின் நேர்த்தியான நெறியாள்கையில் ஆசிரியர் கல்பனா திருச்செல்வன், அமரகுமார் மற்றும் சத்தியரூபி பிரவிந்தன் ஆகிய ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் மாணவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
