தேசிய புலனாய்வு பிரிவின் அலுவலகத்திற்கான காணி கோரிக்கை நிராகரிப்பு
வவுனியாவில் தேசிய புலனாய்வு பிரிவிற்கான அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கையானது, நிராகரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27.12) இடம்பெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணியற்ற அரச திணைக்களங்கள்
காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியன தமக்கு நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |