தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரியொருவரின் மோசடிகள் அம்பலம்
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பன்னிரெண்டு வருடங்களுக்கும் அதிகமாக அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு முன்னிலையில், தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியிலிருந்து இடைநிறுத்தம்
அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பல சந்தர்ப்பங்களில் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலும் பணி இடைநிறுத்தப்பட்ட காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர் பெற்றுள்ளதாகவும் கோப் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை அமைச்சின் அனுமதியின்றி இந்த நிறுவனத்திற்கு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவன
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதம் 12 இலட்சம் கொடுத்து வாடகை கட்டடம்
குறித்த முன்னாள் பணிப்பாளரின் கல்வி சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், இவர் கடந்த வருடம் எவ்வித அனுமதியும் பெறாமல் கனடா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த நிறுவனத்தில் அதிகாரிகள் எண்ணிக்கை
முப்பதுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் மாதம் 12 இலட்சம் கொடுத்து
வாடகை கட்டடத்தில் நிறுவனம் நடத்தப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளது.