ஆட்பதிவுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30.03.2026) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அண்மையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று முதல் வழமைக்கு திரும்பும் ஒரு நாள் சேவை
அதன்படி, கடந்த 23, 24 மற்றும் 26ஆம் திகதிகளில் ஒரு நாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கு இன்று தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

அதேநேரம், தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் வழமையான சேவைகள் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 18 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan