மனம் திறந்த ட்ரம்ப் - இலக்கு வைக்கப்படும் ஈரானின் உயிர்நாடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள "எண்ணெயைக் கைப்பற்ற" விரும்புவதாகவும், கார்க் தீவில் உள்ள ஈரானின் ஏற்றுமதி மையத்தை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
ஜனவரியில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் எண்ணெய் தொழிலை "காலவரையின்றி" கட்டுப்படுத்த அமெரிக்கா நோக்கம் கொண்டிருந்ததை அவர் குறிப்பிட்டிருந்தார்.
எண்ணெயும் கார்க்கும்!
இந்த சாத்தியமான நடவடிக்கையை வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்கா கையாண்ட அணுகுமுறையுடன் ட்ரம்ப் ஒப்பிட்டுள்ளார்.

"உண்மையைச் சொல்லப்போனால், ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், ஏன் இதைச் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், ஒருவேளை கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்று ட்ரம்ப் சர்வதேச பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
மேலும், அதற்கு நாம் கார்க் தீவில், சிறிது காலம் இருக்க வேண்டியிருக்கும். அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.