இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் கியூ.ஆர் முறைமை! கஞ்சன விஜேசேகர அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கியூ.ஆர் முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வாரத்திற்கான நடைமுறை
ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முடிந்தவரை தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
National Fuel Pass QR system stats from the 1st of August to 4pm on the 7th of August.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 7, 2022
Fuel Quotas will be automatically updated at midnight today & it will remain the same for next week. After analyzing data this week, necessary changes will be done where possible next Sunday. pic.twitter.com/UJgPXZRpRj