QR முறைமை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கடியான நிலை
"மிகவும் நெருக்கடியான நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
அமைச்சு மட்டத்திலான முறையான முகாமைத்துவத்தினால் தற்போது எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
There’s No Decision to remove the fuel management QR system from next month as stated by certain Media & Social Media Posts. The Fuel Management QR system will be continued until the full fuel requirements can be fulfilled.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 21, 2022
எனினும் ஊடகங்கள் தவறான விடயங்களை சமூகமயப்படுத்துகின்றன. QR முறைமை எதிர்வரும் மாதம் முதல் இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது" எனவும் தெரிவித்துள்ளார்.