இலங்கை பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம் - கல்வி அமைச்சர் தகவல்
தேசிய கல்விக் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12.3.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கண்காணிப்புக் குழு
தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளை ஒரு வகையாகப் பிரிக்கக் கூடாது என்று கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பில் பரிந்துரைக்கப்பட்டு கண்காணிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாடசாலைகள் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான பாடசாலைகளை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தம்
ஆசிரியர்களின் அறிவு, தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் கல்வி சீர்திருத்தங்களுடன் வருகின்றன.
இலங்கையில் கல்விக்கென ஒரு கொள்கை உள்ளது. அது காலப்போக்கில் மாற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்
இலங்கையில் கல்விக் கொள்ளையானது நாடாமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்படுகிறது. அதை மீண்டும் நாடாளுமன்றமே மாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.