தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

Central Bank of Sri Lanka Vijitha Herath Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples employee provident fund
By Benat Jul 02, 2023 03:00 PM GMT
Report

தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேசிய கடனை ஒருபோதும் மறுசீரமைக்கப் போவதில்லை என அரசாங்கம் கடந்த காலங்களில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சர்வதேச பிணைமுறியாளர் குழுவின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அரசாங்கம், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் மக்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சகல கடன் வழங்குநர்களும் சமவுடமையுடன் மதிக்கப்பட வேண்டும். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்க கூடாது என குறிப்பிடப்பட்டது.

இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான செயற்பாடு வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

இருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்படவில்லை. தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது. இவர்களுக்கான வட்டியை தீர்மானிக்கும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்

தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு | National Debt Restructuring Sri Lanka Epf Etf

ஆனால் பிரதான விநியோகஸ்தர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு விலக்களிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது. தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் தனியார் ஆரம்ப விநியோகஸ்தர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 341 கோடி ரூபா வரி செலுத்தவில்லை. இதுபோல் பல நிறுவனங்கள் பல கோடி ரூபா வரி செலுத்தவில்லை. இந்த வரியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. வங்குரோத்துக்கு மத்தியிலும் டீல் கொள்கை செயற்படுத்தப்படுகிறது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடும் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது. அட்டை பூச்சிக்கு கடிபட்டு,மழையில் நனைந்து வெயிலில் வாடும் தோட்ட தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது குறைகளை குறிப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த இரு நாட்களாக அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றுக்கு ஏற்படுத்த போகும் மாற்றம் தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் 9 சதவீத வட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியாது.

ஏனெனில் இந்த 9 சதவீத வட்டிக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்த கொள்கைளை ஏற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்ற காரணத்தால் தேசிய கடன் மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் என குறிப்பிட்டுள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US