இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள அபாய நிலை! 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் வேலை நேரம்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச தொழிலாளர் சட்டமூலத்தினூடாக அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதுவரை தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13 சட்டங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக தொழிலாளர்களின் 8 மணிநேர வேலை நேரத்தை நீக்கி அதனை 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலாளர்களின் அனுமதியுடன் அதனை 16 மணிநேரமாக அதிகரிப்பதற்கான அபாயமும் காணப்படுகின்றது. நாளாந்தம் 8 மணிநேர வேலைநேரம், உலகளாவிய ரீதியில் பல உயிர்களை இழந்து கடினமான போராட்டத்தின் பின்னர் பெறப்பட்ட ஒன்றாகும். அதனை இல்லாது செய்வது உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri