காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தில் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் பல தரப்பினால் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்த நடைமுறையை நிறுத்தியது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டதின் ஒன்பதாவது நாளான நேற்று சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக பலரும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sri Lankans sing National Anthem in Tamil at Galle Face protest
— NewsWire ?? (@NewsWireLK) April 17, 2022
? @Amana_Zahid pic.twitter.com/fg7U9GjsFZ





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
