நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கை
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் 2.4 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் (11.12.2022) இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :தீபன்
பிரதேச சபை உறுப்பினர் வாள்களுடன் கைது
வலி. மேற்கு பிரதேச சபையின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கசிப்புடன் இருவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (11.12.2022) இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர்களிடமிருந்து தலா ஆயிரத்து ஐந்நூறு மில்லிமீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், சான்றுப்பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: கஜிந்தன்
கஜ முத்துக்களை கடத்திய நபர்கள் கைது
அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (11.12.2022) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை மகாஓயா இலங்கைவங்கிக்கு அருகில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது பிபிலையில் இருந்து கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக மகாஓயாவிற்கு முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி வந்துள்ள நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்து முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் கடத்திக் கொண்டுவரப்பட்ட 5 கஜமுத்துக்களுடன் 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிபிலையைச் சேர்ந்த 53,34,36,வயதுடையவர்கள் எனவும் இவர்களையும் மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் மகாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பவன்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
