நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்(video)
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி கட்டப்பிராய் இருபாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத சமயம் வீட்டு கதவை உடைத்து வீட்டில் இருந்த 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினர் கைது செய்துள்ளனர்.
நாயன்மார்கட்டை சேர்ந்த 24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நகைகள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் நீண்டநாள்களாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் போதைப்பொருள் பாவனைக்காகவே களவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.
மட்டக்களப்பு
கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேகநபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேகநபரிடம் இருந்து 800 கிராம் நாட்டு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக சந்தேகநபர் வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்தி-பாறுக் ஷிஹான்
திருகோணமலை
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த கஞ்சா போதைப்பொருளை குடிப்பதற்காக கொண்டு சென்ற இளைஞரொருவரை பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கட்டளையிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று (25) திருகோணமலை
நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இக்கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது
செய்தி - பதுர்தின் சியானா





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
