சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து நாசா விண்கலம் வரலாற்று சாதனை (PHOTOS)
நாசாவின் பார்க்கர் சோலார் விண்கலம் வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.
பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர்.
இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது.
☀️ Our #ParkerSolarProbe has touched the Sun!
— NASA (@NASA) December 14, 2021
For the first time in history, a spacecraft has flown through the Sun's atmosphere, the corona. Here's what it means: https://t.co/JOPdn7GTcv
#AGU21 pic.twitter.com/qOdEdIRyaS
சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில், சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கி.மீ) தொலைவில் பயணிக்கும், இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும்.
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.
'கொரோனா' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியின் வழியாக பார்க்க சோலார் ப்ரோப் கடந்து சென்றுள்ளது. (கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள்.)
நாசா விண்கலம் பார்க்கர் சோலார் ஒரு வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து உள்ளது. இது குறித்து நாசா, சூரியனின் வளிமண்டலத்தில் நுழைவது ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று நினைத்ததை இப்போது செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
நாசா கூற்றுப்படி, விண்கலம் ஏப்ரல் 28 அன்று சுமார் 2 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பமான சூரியனின் வளிமண்டலத்தில் வெற்றிகரமாக நுழைந்தது.பார்க்கர் சோலார் புரோப் வெற்றிகரமாக சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது.




