புவியீர்ப்பு சக்திக்கும் உடல் எடைக்கும் உள்ள தொடர்பு! ஆய்வு மூலம் வெளியாகியுள்ள தகவல்
விடுமுறையைக் கொண்டாட உலகின் பல நாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடல் எடை அதிகரிப்பு குறித்து கவலை கொள்கின்றனர்.
சுற்றுலா செல்வதற்கு முன்னர் இருந்த எடையை விடவும், பயண நிறைவில் எடை கூடி விடுவதாகத் தெரிவிக்கின்றனர்.
எனினும், இலங்கைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எடை குறைந்து விடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
புவியீர்ப்பு சக்தி மாறுபாடு
உலகின் பூகோள அமைவிடங்களின் அடிப்படையில் அவற்றின் புவியீர்ப்பு சக்தியும் மாறுபடுகின்றது.
புவியீர்ப்பு சக்தி மாற்றத்தின் அடிப்டையில் உடல் எடை குறைவாகவும், அதிகமாகவும் காண்பிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றது.
உலகின் முதனிலை வானியல் ஆய்வு நிறுவனமான நாசா இந்த புவியீர்ப்பு விசைக்கும் உடல் எடைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் இலங்கையில் ஒருவரின் உடல் எடை குறைவாக காணப்பட்டாலும் துருக்கியில் எடை கூடுதலாக காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவு, கனடாவில் காட்டப்படும் எடை
நியூசிலாந்தில் 68 கிலோ கிராம் எடையைக் கொண்ட ஒருவர் மாலைதீவு அல்லது கனடாவில் மூன்று கிலோ கிராம் குறைந்து விடுகின்றார்.
உலகில் மிகவும் புவியீர்ப்பு சக்தி காணப்படும் இடமாக இலங்கையின் தென் பகுதி, மாலைதீவு, கனடாவின் வடபகுதி என்பனவற்றை நாசா அடையாளப்படுத்தியுள்ளது.
புவியீர்ப்பு சக்தி அதிகமாக காணப்படும் நாடுகளின் வரிசையில் பொலிவியா முதனிலை வகிப்பாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
பூமியில் காணப்படும் திரவப்பாறைகள், கற்கள் போன்ற பல பொருட்களின் செறிவின் அடிப்படையில் புவியீர்ப்பு அளவு மாறுபடுகின்றது.