உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நாசா: வழங்கப்படவுள்ள பரிசு தொகை
மறுசுழற்சி திட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா(Nasa) விண்வெளி வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நாசாவின் முயற்சி
நிலவில் நீண்டகாலம் தங்கி, ஆய்வு மேற்கொள்ள நாசா முயற்சி செய்து வருகின்றது.
மேலும், ஆய்வு மேற்கொள்ளும் காலகட்டத்தில், விண்வெளி வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியிலும் ஈடுபடவுள்ளது.
நிலவில் 1969 முதல் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான விண்வெளி பயணம் மேற்கொண்டவர்களின் மனிதக் கழிவுகள், நிலவின் மேற்பரப்பைத் தொடாமல், அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி வீரர்களின் மலம், சிறுநீர், வாந்தி உள்ளிட்ட மனிதக் கழிவுகள், 96 பைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா அழைப்பு
இந்த நிலையில், இவ்வாறான மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவற்றை நீர் அல்லது உரம் போன்ற பயன்படுத்தக்கூடிய வளங்களாக மாற்றும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபடவுள்ளனர்.
இதனால், விண்வெளியில் ஏற்படுத்தப்படும் கழிவுகள் குறைவாகவோ அல்லது பூமிக்கே திருப்பிக் கொண்டுவரத் தேவையில்லாத நிலை ஏற்படும்.
இந்த மறுசுழற்சி திட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், உருவாக்குபவர்களுக்கு 3 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 25.8 கோடி) பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
