நாசாவில் முக்கிய அதிகாரிகள் திடீர் நீக்கம்
அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா (NASA) உள்ளது.
உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
வானிலை ஆய்வு மற்றும் பருவ கால மாறுபாடு
நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு நிறுவன தலைவராக கேத்ரின் கால்வின் (Katherine Calvin) என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.
தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
நாசாவில் வானிலை மாறுபாடு துறை தேவையில்லாதது என ட்ரம்ப் ஏற்கனவே கூறி வந்ததமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெளிக்கிளம்பும் மறைக்கப்பட்ட இரகசியங்கள்: சிறையில் அடைக்கப்படுவாரா ரணில்..! 27 நிமிடங்கள் முன்

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
