தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு (Tamil Nadu) நோக்கி பயணமாகி உள்ளார்.
இராமேஸ்வரம் - மதுரை - டெல்லியின் பயணத்திட்டத்தின் படி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் நூற்றாண்டுகள் பழமையான பாலத்திற்கு பதிலாக ரூ. 535 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
டெல்லி நோக்கி பயணம்
பின்னர், ,ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் மைதானத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைக்க உள்ளார்.
அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் உலங்கு வானூர்தி மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை சென்றடைய உள்ளார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலமாக நரேந்திர மோடி டெல்லி நோக்கி பயணிக்க உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri