நரேந்திர மோடியை உற்சாகப்படுத்திய கொழும்பிலுள்ள இந்தியர்களின் வரவேற்பு
கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் தனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய சமூகத்தினரின் வரவேற்பு
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி! எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி! pic.twitter.com/1zZuXdHIGu
— Narendra Modi (@narendramodi) April 4, 2025



