ஏழு பேரின் உயிரை பறித்த நானுஓயா வீதியில் தலைகீழாக கவிழ்ந்த வாகனம்
நானுஓயா-ரதெல்லை குறுக்கு வீதியில் இன்றைய தினம்(06.05.2023) வாகன விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
நானுஓயா, ரதெல்லை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததால் இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயந்திர கோளாறு
இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே இடத்தில் கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஏழு பேரின் உயிர்களை பலியெடுத்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.





சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
