நானுஓயா கிளாரண்டனில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசியமான கற்றல் உபகரணங்கள் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.
"உயிர் நேயம் உதவும் கரங்கள்" அமைப்பின் நானுஓயா பகுதியின் அதன் பொருளாளர் நிலோன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு 30 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்வில் உயிர் நேயம் உதவும் கரங்களின் குழு உறுப்பினர்கள் பொது மக்களின், பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அமைப்பினால் நாடு தழுவிய ரீதியாக அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.





