நனோ உரத்தை இலங்கையின் விவசாய ஆராய்ச்சி நிறுவகம் பரிசோனைக்கு உட்படுத்தியதா? அனுரகுமார கேள்வி
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரோஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதனால், தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் உரப்பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஜேவிபியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) இதனை இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நனோ உரம் என்பது இந்திய பரிசோதனை அறிக்கைகளின் படி, நனோ யூரியாவாகும். அது உபரி சத்தூட்டலாகவே பயன்படுத்த முடியும். பரிசோதனைகளின் படி, நனோ உரத்தை ஒரு மாத விவசாயப் பயிர்ச்செய்கைக்கும் 50 வீத யூரியாவை பயன்படுத்தியப் பின்னருமே பயன்படுத்த முடியும்.
இந்த நிலையில், நனோ உரம் 4வீத யூரியாவைக்கொண்டுள்ளது என்றும் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , புதிய விவசாயமுறை ஒன்றை அறிமுகப்படுத்தும் போது ஒருமாத பரிசோதனையின் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனினும்,நனோ உரத்தை இலங்கையின் விவசாய ஆராய்ச்சி நிறுவகம் பரிசோனைக்கு உட்படுத்தியதா? என்பது சந்தேகமே என்றும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
