இலங்கையில் அரசியல்வாதிகளுக்கு அதிரடியாக விதிக்கப்பட்டுள்ள தடை
அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து ஆளுநர்களும் கூடி இந்த முடிவை அறிவிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகளில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு தடை
பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
