யாழிலுள்ள இடங்காட்டிகளின் அவலநிலை! பொதுமக்களின் வாகன வரிப் பணம் எங்கே?
இலங்கையில் எந்தப் பிரதேசங்களிலும் இல்லாதவாறு, யாழ்பாணத்திலுள்ள ஊர்களை அடையாளப்படுத்து பல பெயரப்பலகைகள் சிறைந்த நிலையில் காணப்படுவது, யாழ் மக்களை கவலையில் ஆழைத்திவருகின்றது.
கைதடி, சாவகச்சேரி, புலோப்பளை, வட்டக்கச்சி பெயர்ப்பலகைகள் சிதைந்து போயிருக்கின்றன.
பெயர்களை வாசித்தறிய முடியாதளவுக்கு சேதமானவையும் சில சேதமாகிக் கொண்டும் வருகின்றன.
இடங்களைத் தேடி வீதியில் பயணிக்கும் பயணிக்கு இத்தகைய பெயர்ப்பலகைகள் தெளிவாக இருப்பது அவசியம்.
இடங்களை குறியிட்டுச் சொல்லும் வழிகாட்டியாக பெயர்ப்பலகைகள் செயற்படுகின்றன.
சுற்றுலா துறையால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை அரச இயந்திரம் இவற்றில் அக்கறையற்று இருப்பது பொறுப்பற்ற செயல்.
இடங்களை இலகுவாக இனங்காண முடிந்தாலே இடங்களைத் தேடி பயணிக்க விருப்பம் ஏற்படும்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத் துறைக்கு வீதிக்குறியீடுகளும் இடங்களை சுட்டிக்காட்டும் பெயர்ப் பலகைகளும் பெரிதும் உதவக்கூடியன.
வீதியினை பயன்படுத்துவதற்காக வாகனப்பாவனையாளர்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் இந்த வீதிக் கட்டமைப்புக்களை சீர் செய்வதற்கு பயன்படுத்தி இவற்றை சீர்செய்துகொள்ள வேண்டும்.











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 43 நிமிடங்கள் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
