ராஜபக்சர்களின் செயற்பாடுகள் காரணமாக நாமல் ராஜபக்சவின் அரசியலுக்கு பிரச்சினை
ராஜபக்சர்களின் செயற்பாடுகள் காரணமாக நாமல் ராஜபக்சவின் அரசியலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் திறமையற்ற நிர்வாகம் காரணமாக இன்று நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
முன்னைய காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், தமது திறனற்ற செயல்களால் தமது பரம்பரையை இல்லாமல் செய்தனர். அவ்வாறான ஒருவரே கோட்டாபய ராஜபக்சவாகும் என்று நளின் பண்டார தெரிவித்தார்.
திருகோணமலையில் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டபோது எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்தநிலையில் எதிர்வரும் நாட்களில் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்போவதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட நளின் பண்டார, அரை இறாத்தல் பாண் ஒன்றை எடுத்து வந்து அதனை காட்டி பாணின் விலை 130ஆக அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.
7 மூளையை கொண்டுள்ளதாக கூறி நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பசிலின் காரணமாக இன்று நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார சபையில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவை தவிர்ந்த ஏனையவர்கள் 8 ஆம் வகுப்பும் கற்கவில்லை என்று நளின் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் வீசா காரியாலத்துக்கு சென்று இளைஞர் ஒருவருடன் கலந்துரையாடிதை காணமுடிந்தது.
எனினும் அவர் வீசா அலுவலகத்துக்கு செல்லாமல், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்றிருக்கவேண்டும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam