நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவதனை யாராலும் தடுக்க முடியாது
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராபஜக்ச ஜனாதபிதியாவதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அனுராதபுர மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில், அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை மீட்ட தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச, நமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பது நிச்சயம்” என அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசு பெரியோர்களை மட்டும் அல்லாது சிறுவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனவும் நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமெனில் நாமல் ராஜபக்சவே ஜனாதிபதியாக வேண்டும் எனவும் அது நாட்டை மீட்ட மகிந்த ராஜபக்சவிற்கு செய்யும் மிகப் பெரிய கௌரவமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தினால் தீா்வு காண முடியவில்லை எனவும் தமது அரசாங்கத்தினால் இதற்கு தீா்வு வழங்கப்படும் எனவும் திஸ்ஸ குட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ராஜபக்சக்கள் தொடர்பிலும் பொதுஜன முன்னணி தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு அந்த கட்சி திஸ்ஸ குட்டியாரச்சிக்கு ஏற்கனவே அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
