வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நாமல் எழுப்பும் கேள்வி

Namal Rajapaksa Sarath Fonseka Political Development
By Kamal Feb 21, 2026 04:16 PM GMT
Report

இறுதிக் கட்ட போரின் போது வெள்ளகை் கொடி விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில்  முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச உத்தரவிட்டதாக கூறும் பொன்சேகா, பிரிதொரு சந்தர்ப்பத்தில் மஹி்ந்த, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியதாக கூறுவது வேடிக்கையானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலைகாரர் அல்ல என சரத் பொன்சேகா பொதுவெளியில் தெரிவித்திருப்பது நல்ல முன்னேற்றமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்காக புதிய சட்டம் விரைவில்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்காக புதிய சட்டம் விரைவில்

இராணுவ நடவடிக்கைகள்

அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு பொதுமக்கள் முன்னிலையில் ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுத்தது மகிந்த ராஜபக்சவே என அவர் குறிப்பிட்டார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நாமல் எழுப்பும் கேள்வி | Namal Welcomes Fonseka S Statement

போர் சூழலில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பது அபூர்வமான ஒன்றல்ல எனவும், அதேவேளை போரின் போது வழங்கப்பட்ட உத்தரவுகள் குறித்து சரத் பொன்சேகா பல்வேறு காலங்களில் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

இராணுவ நடவடிக்கைகள் தமிழர் சமூகத்துக்கு எதிராக அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படும் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிர்தியாகம் செய்ததாகவும், குறைந்தளவு உயிரிழப்பு மற்றும் சொத்து சேதத்துடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே மகிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

குற்றச்சாட்டு

சில அரசியல் குழுக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மகிந்த ராஜபக்ச “இரத்தத்திற்காக ஏங்கிய கொலைகாரர்” அல்ல என்பது குறித்து சரத் ஃபொன்சேகா விளக்கம் அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி, அழிவை ஏற்படுத்திய தலைவராக அல்லாது, நாட்டிற்கு சுதந்திரத்தை கொண்டு வந்த தலைவராக நினைவுகூரப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நாமல் எழுப்பும் கேள்வி | Namal Welcomes Fonseka S Statement

போருக்குப் பிந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மகிந்த ராஜபக்சவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சுட்டிக்காட்டிள்ளார்.

குறைந்தளவு உயிரிழப்புடன் நாட்டிற்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதே அவரது பிரதான இலக்காக இருந்தது என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். 

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US