நாமலை சந்தித்த ஜூலி சங்
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்சவை சந்தித்தோம்.
அரசியல் ஈடுபாடுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற புதிய பொறுப்பில் அவரது அரசியல் ஈடுபாடுகள், இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
As part of our outreach across the range of Sri Lankan parties, met with Namal Rajapaksa @RajapaksaNamal in his new role as SLPP national organizer to hear about political engagement, including issues affecting youth, and exchange views on strengthening US-SL relations. pic.twitter.com/2zSOCWAX5H
— Ambassador Julie Chung (@USAmbSL) May 11, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |