நாமல் ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக முயற்சிக்கின்றார்:பிமல் கேள்வி
எதிர்வரும் 2029ம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஐஸ்லாந்திலா ஜானதிபதியாக முயற்சிக்கின்றார் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த கேள்வியை எதிர்க்கட்சிகளிடம் எழுப்பியுள்ளார்.
இந்த போதைப்பொருள்காரர்களினால் ஐஸ்லாந்து அரசாங்கமும் எம்மை விமர்சனம் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினருக்கு தற்பொழுது ஆடையில்லை எனவும் தேசிய மக்கள் சக்தி மீது ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றிணைந்துள்ளதாகவும் மத்திய வங்கி திருடன் என கூறப்பட்ட ரணிலுடனும் இணைந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது நாமல் மற்றும் ரணில் தரப்புடனே உள்ளனர், அதனால்தான் கூட்டு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஊடக சந்திப்புக்களை நடத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது ஐஸ் போதைப்பொருள்காரர்களுடன் இருப்பதாகவும் அதனால் அவர்களினால் ஊருக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் என பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்காக தருவிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு கொள்கலன் இரசாயனங்கள் மீட்கப்பட்டது.
இரசாயனங்கள் மீட்கப்பட்ட காணி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரது காணி என விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
இவ்வாறான ஓா பினன்ணியில் ஐஸ் போதைப் பொருளையும், நாமல் ராஜபக்சவையும் தொடர்புபடுத்தி பிமல் ரட்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
