நாட்டில் பல வரிசைகளில் மக்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் நாட்டில் பல வரிசைகள் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தப் போவதாக உறுதிமொழி வழங்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் தற்பொழுது நாட்டில் எரிபொருள் எரிவாயு போன்ற வரிசைகளுக்கு மேலதிகமாக டின் வரிசையும் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் அது குறித்து ஆராய்ந்து அது சாத்தியமா என பார்த்து அமல்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வெறுமனே தேர்தல் மேடைகளில் பேசி அதனை நடைமுறைப்படுத்துவதனால் பாதிக்கப்பட போவது மக்களே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதேனும் ஓர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதற்கு தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரிசை பிரச்சனை இல்லை என்ற போதிலும் கிராமங்களிலும் நகரங்களையும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை கூறும் ஒரு நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமே தவிர இது பெருமை கொள்ளக் கூடிய விடயம் அல்ல என அவரை சுட்டிக்காட்டி உள்ளார்.
மிளகாய் தூளிலிருந்து அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.