தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு

Election Commission of Sri Lanka Namal Rajapaksa Sri Lanka
By Dharu Aug 24, 2024 05:57 AM GMT
Report

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி பாரிய அரசியல் மாற்றத்திக்காக காத்திருக்கும் இலங்கையில் தற்போது பிரசாரங்களும், உறுதிமொழிகளும் சொல்லாடல்களால் மேலோங்கியுள்ளன.

வழமைக்கு அப்பாற்பட்டு பிரதான அரசியல் தலைமைகள் தனித்தனியான போட்டியிடலை மேற்கொண்டுள்ளதால், இந்த பிரசாரங்களில் தோற்றப்பாடு வேறுபடுகிறது.

இங்கு முக்கிய தேர்தல் பிரசார வார்த்தையாக தேசிய பாதுகாப்பு என்ற சொல் அனைத்து மேடைகளிலும் எதிரொலிக்கிறது.

எங்கள் கட்சி தேசிய பாதுகாப்பை இலக்காக கொண்டது, தேசிய பாதுகாப்பே எங்களுடைய நகர்வு என மேடைகளில் பரந்துபட்ட கருத்துக்கள் வெளியாகின்றன.

ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது கூச்சலிட்ட இளைஞர்கள்

ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது கூச்சலிட்ட இளைஞர்கள்

ஒரே ஒரு கேள்வி

இங்கு பெரும்பாலான மக்கள் இடத்தில் இருப்பது ஒரே ஒரு கேள்விதான்...

இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 423 பில்லியன் ரூபா என ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு | Namal Side Campaigning Targeting National Security

இது முந்தைய ஆண்டை விட இது சதவீத அதிகரிப்பை காட்டுகிறது.

இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. நவீன வரலாற்றில் தேசியப் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக பணம் தேவைப்படும்.

ஆனால் ஏறக்குறைய 30 வருடகால யுத்தத்தின் போது நாம் செய்ததை விட யுத்தமில்லாத காலங்களில் நாம் ஏன் அதிகம் செலவிடுகிறோம்?

தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்போருக்கு கண்டனம் வெளியிட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி

தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்போருக்கு கண்டனம் வெளியிட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி

பாதுகாப்புச் செலவு

1960 முதல் 1982 வரை, உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு, நமது பாதுகாப்புச் செலவு மொத்தம் 0.52 பில்லியன் டொலர்கள் மாத்திரமே.

பின்னர், 1983ஆம் ஆண்டை உள்நாட்டுப் போர் தொடங்கிய ஆண்டாகக் கருதி, போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு வரையிலான 26 வருட காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பிற்காக 14.92 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளோம்.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு | Namal Side Campaigning Targeting National Security

அதிக செலவை நாம் புரிந்து கொள்ளலாம். எந்தவொரு நாடும் போரை எதிர்கொள்ளும் போது, ​​அதன் பாதுகாப்பிற்காக பெரும் செலவை ஏற்படுத்துகிறது.

ஆனால் யுத்தம் முடிவடைந்த 9 வருடங்களில் அதாவது 2010 முதல் 2019 வரையான 9 வருடங்களில் 17.28 பில்லியன் டொலர்களை செலவழித்துள்ளோம்.

வேறுவிதமாகக் கூறினால், முழுப் போரை விடவும் போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில் தேசியப் பாதுகாப்பிற்காக அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளோம்.

ராஜபக்சர்களின் ஆட்சியில் பெரிய அளவிலான ஊழல்கள் நடந்தாக கடந்த காலங்களில் பேசப்பட்டன.

ஆனால் தற்போதும் கூட ராஜபக்சர்களில் பிரசாரம் தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்த வகையில் அமைகிறது.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஜே.வி.பிக்கு இல்லை எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்றும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியிருந்தார்.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு | Namal Side Campaigning Targeting National Security

அவரின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன,

"ஜனாதிபதித் தேர்தல் சூடு மேலும் மேலும் அதிகரித்து வரும் ஒரு சந்தர்ப்பம் இது.

04 பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது ஊடகங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் மற்றும் அவதூறு பிரசாரங்கள் வெளிவருவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன? இந்த 04 வேட்பாளர்களில் யார் தேசிய பாதுகாப்பை பூர்த்தி செய்ய முடியும் என்பதும், பொருளாதார வேலைத்திட்டம் எவ்வாறு உருவாக்கப்படும் என்பதும் நாட்டு மக்களுக்கு முக்கியமானது.

நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மண்ணில் விதைக்கக்கூடிய கொள்கையும், மண்ணில் விதைக்கப்பட்ட கொள்கையும், சிந்தனையும் இந்தத் தேர்தல் முழுவதிலும் உள்ள ஒரே ஒரு வேட்பாளரே இருபவர் நாமல் என்று நான் நம்புகிறேன்.

மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்லியாசிற்கு பதிலாக மற்றுமொருவரை நியமிக்க கால அவகாசம்

மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்லியாசிற்கு பதிலாக மற்றுமொருவரை நியமிக்க கால அவகாசம்

மகிந்த சிந்தனை

2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மகிந்த சிந்தனை கொண்டு வந்த நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதிய சிந்தனைகளை உறையவைத்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டுமே.

அநுரகுமாரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா? எமது நாட்டில் பௌத்த ஸ்தலங்கள் தாக்கப்பட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு | Namal Side Campaigning Targeting National Security

அத்தகைய ஒருவரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எமக்கு உள்ளது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க வீதிக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றதுடன், பொலிஸ் மா அதிபரை அடித்து உதைத்து தற்போதுபதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதைச் செய்தவர்கள் எப்படி தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்? எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஜேவிபியிடம் இல்லை.

ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதை நோக்காகக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் இன்றி இந்த மூன்று போட்டியாளர்கள் செயற்படுகின்றனர்.

நாமல் ராஜபக்சவின் எக்காரணம் கொண்டும் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த போவதில்லை.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொலிஸ் அதிகாரம் 

அத்துடன் சில நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்துவதுடன், எக்காரணம் கொண்டும் தனிநாடு உருவாக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரங்களை நாம் நடைமுறைப்படுத்துவதில்லை.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு | Namal Side Campaigning Targeting National Security

நாமல் நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய கொள்கைத் திட்டத்தைக் கொண்டுள்ளார்.

இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் இந்த அரசுகளிடம் இருந்து எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் நாங்கள் காணவில்லை. நாங்கள் அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் எங்களுக்குத் தெரியும்." என்றார். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US