ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள நாம் எந்த நேரத்திலும் தாயாராக இருக்கின்றோம்.
விரைவில் முறைப்படியான அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அம்பாந்தோட்டையில் இருந்தாலும், கொழும்பில் இருந்தாலும் எமது கட்சிக்குரிய ஆலோசனையை வழங்கி கட்சியை மகிந்த ராஜபக்ச திறம்பட வழிநடத்துவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |