மக்களை அச்சுறுத்தும் என்பிபி அரசாங்கம்: சபையில் கேள்வியெழுப்பிய நாமல்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17.02.2025) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர், மாத்தளையில் வசிக்கும் ஒருவரை தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுவதாக தெரிவித்தார்.
வெளியான காணொளி
மேலும், அக்குரஸ்ஸ மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸவிலும் இதே போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்க பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் மக்களை அச்சுறுத்துவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மக்களை ஒடுக்குவதையும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் அரசாங்கம் அதன் கிராமப்புற பிரதிநிதிகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
