இலங்கையின் மன்னராக மாற நாமல் விரும்பவில்லை! ஆட்சி செய்யும் மற்றொரு குடும்ப உறுப்பினர்
நாமல் ராஜபக்சவிற்கு நாட்டை ஆளும் எண்ணம் எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மகிந்த ராஜபக்ச மன்னராகயிருக்கலாம், கோட்டாபய ராஜபக்ச மன்னராகயிருக்கலாம், நாமல் ராஜபக்ச மன்னராகயிருக்கலாம் அல்லது நாமலின் மகன் கேசர மன்னராகயிருக்கலாம் ஆனால் நாட்டை ஆள்வது பசில்தான்.
தற்போதைய நெருக்கடி கோவிட்டினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என நான் நீண்டகாலமாக தெரிவித்து வந்துள்ளேன். ஆனால் இந்த கருத்திற்காக நான் அரசாங்கத்திற்குள் இருந்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தேன்.
நான் நெருக்கடி குறித்து எச்சரித்து 11 அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்தேன் ஆனால் நிதியமைச்சு வேண்டுமென்று நிலைமை மோசமடைவதற்கு அனுமதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
