நாமலின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று..!
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முதல் பிரசாரக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.
இதன்படி அநுராதபுரம் (Anuradhapura) கடப்பனஹ பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பிரதேச மக்களுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தாலும் மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் எனவும், அடிமட்டத்தில் உள்ள அனைவரும் மீண்டும் பொஹட்டுவவில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடப்பனஹ மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிற கட்சியினர் வெளியூர்களில் இருந்து ஆட்களை பேருந்தில் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினாலும் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று (21) இடம்பெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam