ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 6 பேரை மாத்திரம் உள்ளடக்கிய உத்தேச ஜனாதிபதி விவாதம் தொடர்பாக பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை மீது முறையிடப்பட்டுள்ளது.
உத்தேச விவாதம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தாம் முறைப்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறினாலும் தீர்வினை வழங்கப்போவதில்லை: முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
ஜனாதிபதி வேட்பாளர்கள்
6 வேட்பாளர்களுக்கு மாத்திரம் நியாயமற்ற முறையில் இந்த விளம்பரம் செய்யப்படுவதால், உத்தேச விவாதத்தை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையகத்திடம் தாம் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோரை மாத்திரம் பெப்ரல் இந்த விவாதத்துக்கு அழைத்துள்ளது.
இந்தநிலையில் எந்த அடிப்படையில் 6 வேட்பாளர்கள் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று ஜனக ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, உத்தேச விவாதத்திற்கு எதிராக தாமும்; முறைப்பாடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறினாலும் தீர்வினை வழங்கப்போவதில்லை: முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |