அநுர - ரணிலிடம் நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும், அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, அவர்கள் வெளியிட்ட நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "இரண்டு தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களின் போது, பொதுத்துறை பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தனர்.
நாமலின் எச்சரிக்கை
எனினும், தற்போது இருவரும் தமது பொறுப்பை திசை திருப்புவதன் மூலம் இந்த பிரச்சினை ஒரு இறந்த முடிவை கொண்டு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாட்டின் முதுகெலும்புகளான அரச பணியாளர்களுக்கான, இந்த நிறைவேறாத இந்த வாக்குறுதிகளின் தாக்கம் குறித்து அவர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை இரண்டு தலைவர்களும் தவறாக வழிநடத்துவது விரக்தியுக்கும் கொந்தளிப்பிற்கும் வழிவகுக்கும் என்றும் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan