கோவிட்டிற்காக சேகரிக்கப்பட்ட நிதி வேறு எந்த தேவைக்காகவும் பயன்படுத்தப்பட போவதில்லை - நாமல்
கோவிட்டிற்காக சேகரிக்கப்பட்ட நிதியை வேறு எந்த தேவைக்காகவும் பயன்படுத்தப் போவதில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் இன்று பதில் வழங்கும் போதே இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்களன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியை கோவிட் தடுப்புக்கு பயன்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
எனினும் இதனை ஏற்றுக் கொள்ளாத நாமல் ராஜபக்ச, கோவிட் தடுப்பு நிதியும் வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri