கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்
கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இளைஞர்களிடையே சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்திற்கு ஒரு ஊக்கியாக வழங்குவதற்கும் வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த திட்டம், ஒவ்வொரு ஆண்டும் 100,000 பொதுமக்களுக்கும் 5000 விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும்.
உள்ளூர் மட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உடற்பயிற்சி கூடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது..
இதேவேளை உத்தேச திட்டம் 2021 - 2022 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
