நாமல் ராஜபக்ச மன்னர் சார்ல்சை சந்தித்தாரா! நாமலின் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இங்கிலாந்தில் மன்னர் சார்ல்சை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில், விசேட விரிவுரைகளை நிகழ்த்த சென்ற நாமலுக்கு லண்டனில் புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்பையடுத்து அந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டன.
அவதூறு ஏற்படுத்தும் போலியான புகைப்படம்
அதன் தாக்கத்தில் நாமல் இங்கிலாந்தில் பல பிரபலங்களை சந்தித்தார் என தகவல்கள் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் இங்கிலாந்தில் மன்னர் சார்ல்சை சந்தித்தார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள குறித்த படம் செயற்கை தொழில் நுட்பத்தில் அல்லது போலியாக செய்யப்பட்ட புகைப்படமாகும்.
இது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் புனையப்பட்டதாகும் என ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri