நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்
ஜனாதிபதியின் இயலாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தங்குமிடம் ஒன்றிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம்
இதன்போது, அங்கிருந்த மக்களிடம் நாமல் ராஜபக்ச பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் மக்கள், தங்களுக்கு காணி வழங்கப்படவில்லை, பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அப்போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச, அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்கக் கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொறுப்புக்குரிய ஜனாதிபதியே இதனை செய்ய வேண்டும். அவரின் இயலாமையே இதற்கு காரணம் என்றும் நாமல் தெரிவித்தார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நாமலின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்ட நிலையில் குறித்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாமல் ராஜபக்ச குறித்த இளைஞரிடம் விபரங்களைத் தெளிவுபடுத்தியதுடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதால் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.