இதை செய்ய முடியவில்லை! மகிந்த முன்னிலையிலேயே தெரிவித்த நாமல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் பொதுக்கூட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டம் இன்று (08.10.2022) காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைப்பில் மாற்றம்
அத்துடன், தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக் கொள்கிறது.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கியதோடு, இதில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.